நடிகர் சங்க தேர்தலில் மேலும் 2 நடிகர்,நடிகைகள்

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலில் மேலும் 2 நடிகர்,நடிகைகள்

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2009 மற்றும் 2012-ம் ஆண்டு தேர்தல்களில் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுச்செயலாளராக ராதாரவி பதவி வகித்து வந்தார். இந்த தேர்தலில் விஷால் தலைமையில் இன்னொரு அணி களத்தில் இறங்கியுள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

இரு அணியினரும் ஆதரவு திரட்டும் பணியில் கடந்த ஒருமாதமாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளவர்களாக 3,139 உறுப்பினர்கள் உள்ளனர். 

இதில், அதிகம் பேர் இசை நாடக நடிகர்கள். இவர்கள் மேடையில் பாட்டுப்பாடி நடிக்ககூடியவர்கள். மதுரை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். கரூர், காரைக்குடி, திண்டுக்கல் பகுதிகளிலும் நாடக நடிகர்கள் பரவலாக காணப்படுகின்றனர்.

சினிமா நடிகர்களைவிட, நாடக நடிகர்கள்தான் வெற்றி- தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். எனவே தான், தேர்தலில் போட்டியிடுபவர்கள் இவர்களை குறிவைக்கிறார்கள். 

இரு அணியினரும் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இரண்டாவது கட்டமாக மீண்டும் இந்தப்ப குதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

இன்னொரு புறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடக்கிறது. சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி நிற்கிறார்.

பொருளாளர் பதவிக்கு சிம்பு நிறுத்தப்படுவார் என்று பேச்சு வந்துள்ளது. இந்த பதவியில் முன்பு வாகை சந்திரசேகர் இருந்தார். 

இவர்கள் அணியில் இரண்டு துணைத்தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மற்றும் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தியாகு, குண்டு கல்யாணம், குயிலி, நளினி, ஜெயமணி ஆகியோரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள். 

விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளராக விஷால் நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு பொன்வண்ணன், அல்லது கருணாஸ் நிறுத்தப்படுவார் என தெரிகிறது. கார்த்தி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்கள் அணி சார்பில் நடிகை குஷ்புவையும் முக்கிய பதவிக்கு போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions