பெண்களுக்கு எதிரான குற்றங்களை வேடிக்கை பார்க்காதீர்: விஷால் பேட்டி

Bookmark and Share

பெண்களுக்கு எதிரான குற்றங்களை வேடிக்கை பார்க்காதீர்: விஷால் பேட்டி

அபி மேத்யூ, ஸ்நேகா முரளி சங்கர் ஆகியோர் யூத் சோசியல் இன்னோவெட்டர்ஸ் கவுன்சில் என்ற புதிய அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் பாலியல் கொடுமையில் இருந்து பெண்களைக் காப்பாற்றுவது, அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது ஆகியவை நடைபெறுகின்றன.

இந்த அமைப்பு சார்பில் மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டும் 5 குறும்படங்களின் போட்டி நடந்தது. இதில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும் இதன் விளம்பர தூதருமான விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது...

இது ஒரு சமூக சேவை. இந்த குழுவினருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். வெறுமனே வேடிக்கை பார்ப்பது தான் இந்த உலகத்தை அழிக்கும். அநியாயம் நடக்கும் போது அதை எதிர்க்க வேண்டும். தவறு நடந்தால் எனக்கு கோபம் வரும். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இந்த அமைப்பு செயல்பாடுகளை பள்ளிகள், கல்லூரி போன்ற இடங்களில் நடத்த வேண்டும்.

பள்ளிக்கூடம் செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ஏதாவது தவறு நடந்தால் அது மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆண் பிள்ளைகளுக்கு ஏதாவது என்றால் அது காலப்போக்கில் மறந்துபோகும்.

இந்த சேவையை செய்பவர்களை பாராட்டுகிறேன் என்றார்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions