விஷால் பற்றி அவதூறு: இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

Bookmark and Share

விஷால் பற்றி அவதூறு: இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் விஷால் நற்பணி இயக்க செயலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

நடிகர் விஷால் தமிழக மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக சமீபத்தில் இணையதளத்தில் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இணையதளத்தில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. எனவே தமிழக மக்களின் மனதில் விஷால் பற்றி வேற்றுமை ஏற்படுத்த முயன்ற இணையதளம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுதவிர சமீபகாலமாக அடையாளம் தெரியாத நபர்கள் போன் மூலம் தகாத வார்த்தைகளால் விஷாலை திட்டுகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் விஷால் குறித்து வெளியான அவதூறு செய்தியின் நகல், போன் மூலம் திட்டியவர்கள் தொடர்பான எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்பட்டிருந்தன.


Post your comment





Related News
பொதுமக்களுடன் இணைந்து சீமக்கருலே மரங்களை அகற்றிய விஷால்
ஆர்யா, ராணா, விஷால் இதில் யார் பிடிக்கும்- ரசிகரின் கேள்விக்கு திரிஷா அதிரடி பதில்
அஜித் ரசிகர்களை தொடர்ந்து களத்தில் குதித்த விஷால்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்
என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் திடீர் மனமாற்றம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions