விஷால் அழைத்துப்பேசும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை : ராதாரவி தாக்கு

Bookmark and Share

விஷால் அழைத்துப்பேசும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை : ராதாரவி தாக்கு

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, விஷாலை அழைத்துப்பேசும் அளவிற்கு, அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல், அடுத்தமாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது.

சரத்குமார் தலைமையிலான அணி உள்ளிட்ட அணிகள், இந்த தேர்தலில் களம் காண உள்ளன. சரத்குமார் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள நடிகர் ராதாரவி, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆதரவு திரட்டும் பொருட்டு, மதுரை வந்த அவர், மதுரை ஆதினத்தை சந்தித்துப்பேசினார். பின், நாடக நடிகர் சங்கத்திற்கும் சென்று, அங்கு கலைஞர்களிடம் ஆதரவு திரட்டினார்.

பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ராதாரவி கூறியதாவது, நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணி நிச்சயம் வெற்றி பெறும். நடிகர் சங்கத்தில், இப்போதைக்கு எவ்வித பிரச்னையுமில்லை. வேண்டுமென்றே, சிலர் பிரச்னைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களால் ஏற்படும் எந்தவொரு பிரச்னைகளையும் சந்திக்க தயாராக உள்ளோம். கடந்த தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.
இந்த தேர்தலிலும், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  

விஷால் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், விஷால் பேசிவருவதை பார்த்தால், அவர் சொந்தமாக பேசுவது தெரியவில்லை, யாரோ தூண்டிவிட்டு அவரை பேசுவதாக தெரிகிறது. அவர்களின் பின்னணியில், அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.

நடிகர் சங்க கட்டடம் இடிப்பு குறித்து பொதுக்குழுவில் பேசியதற்கேற்பவே, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அவர்கள் ஏன் இந்த பிரச்னையை எழுப்புகிறார்கள் என்பது தெரியவில்லை. இது எங்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, விஷாலை அழைத்துப் பேசும் அளவிற்கு, அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, அவர் விரைவில் காணாமல்போய் விடுவார் என்று நடிகர் ராதாரவி கூறினார்.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions