பிப்ரவரியில் தொடங்கும் விஷாலின் சண்டைக்கோழி 2 படப்பிடிப்பு!

Bookmark and Share

பிப்ரவரியில் தொடங்கும் விஷாலின் சண்டைக்கோழி 2 படப்பிடிப்பு!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான ப்ளாக் பஸ்டர் திரைப்படம் சண்டைக்கோழி. விஷால் கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். தற்போது மருது படத்தில் நடித்துவரும் விஷால், அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இதில் கலந்துகொள்கிறார்.

பிப்ரவரியில் தொடங்கும் விஷாலின் சண்டைக்கோழி 2!
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான ப்ளாக் பஸ்டர் திரைப்படம் சண்டைக்கோழி. விஷால் கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். தற்போது மருது படத்தில் நடித்துவரும் விஷால், அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இதில் கலந்துகொள்கிறார்.
@@@@@@@@@@@@
பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வற்புறுத்தல்
தமிழ் பட உலகமும் ஜல்லிக்கட்டும் இரண்டற கலந்தவை. நிறைய படங்களில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிவாஜி கணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 
அதில் ‘அஞ்சாத சிங்கம் என் காளை’ என்று பாடி ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவராக பத்மினி நடித்து இருந்தார். அந்த காளையை ஜெமினிகணேசன் அடக்கி அவரை மணமுடிப்பது போன்று காட்சி இருந்தது. ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தில் காளையை அடக்கும் காட்சியில் எம்.ஜி.ஆர் நடித்து இருந்தார். ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிகாந்த் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் காளையன் என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து இருந்தார். ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காட்சி உள்ளது. 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, மிருக வதை என்று ‘பீட்டா’ அமைப்பு எதிர்த்து வருகிறது. பொங்கல் பண்டிகையில் இந்த விளையாட்டை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கி இருக்கிறது. இதனால் தமிழ் அமைப்புகள் மத்தியில் ‘பீட்டா’ அமைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்கள் குவிகின்றன. தமிழகத்தில் ‘பீட்டா’ அமைப்பின் தூதுவராக நடிகை திரிஷா இருக்கிறார். விலங்குகள் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு தயார் செய்யும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 
விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று டுவிட்டரிலும் பீட்டாவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கோபம் திரிஷாவை நோக்கி திரும்பி இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் திரிஷாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
தமிழ் படங்கள்தான் திரிஷாவை வளர்த்தன. எனவே தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள அரண்மனை-2 படத்தை புறக்கணிப்போம் என்று அவர்கள் கூறினர். தென் மாவட்டங்களில் அவரது படங்களை ஓட விடமாட்டோம் என்றும் தெரிவித்தனர். 
இந்து மக்கள் கட்சியும் திரிஷா பீட்டா அமைப்பில் இருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகை எமிஜாக்சன் ஏற்கனவே டுவிட்டரில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கருத்தை பதிவு செய்து இருந்தார். இதையடுத்து அவரது உருவ பொம்மையை சென்னையில் எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர் கலந்து கொண்ட படவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது குறிப்பிடத்தக்கது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
புது வருடத்தில் அஜித்தின் புதிய திட்டம்
‘வேதாளம்’ படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஏற்கெனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். மருத்துவர்கள் சுமார் 6 மாதங்கள் ஒய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பதால், அஜித் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். 
அஜித் அடுத்ததாக ‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற வெற்றி படங்களை இயக்கிய சிவா இயக்கத்திலும், ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என்ற ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். சிவா இயக்கும் படத்தின் கதை அனைத்தும் முடிவாகி, திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இவ்விரு படங்களிலும் அஜித், மே மாதம் முதல் ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். சிவா படத்தை தீபாவளிக்கும், விஷ்ணுவர்தன் படத்தை பொங்கலுக்கும் வெளியாகும் வகையில் தனது பணிகளை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித்.
@@@@@@@@@@@@@@@@@@
தமிழில் டப் ஆகும் ரவிதேஜா படம்
சமீபகாலமாக தெலுங்கில் வெளியாகி பெரிய ஹிட்டாகிய படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்து வசூலை வாரிக்குவித்து வருகின்றன. மகேஷ்பாபு நடித்த ‘செல்வந்தன்’, ‘இதுதாண்டா போலீஸ்’ ஆகிய படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்து வசூலை வாரிக்குவித்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடித்து வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ‘பழுப்பு’ என்ற படம் தமிழில் ‘எவன்டா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கிறது. இப்படத்தை பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தயாரித்து வெளியிடுகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ளனர். மற்றும் பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஆதித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ராய் லட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தை ராஜாராஜா என்பவர் இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலாட்டா படம். காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்து உருவான இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களையும் கவரும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். 
@@@@@@@@@@@@@@@@@@
கமல் ஹாஸன் தனது ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை 1981-ல் தொடங்கியதிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு வரை அவரது சொந்தப் படங்களின் இசையமைப்பாளராக இளையராஜா மட்டும்தான் பணியாற்றினார். இடையில் காதலா காதலா படத்துக்கு மட்டும் இளையராஜா மகன் கார்த்திக் ராஜா இசையமைத்தார். 2005-ம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்குப் பிறகு கமலின் படங்களுக்கு இசையமைத்தவர்கள் லிஸ்ட்டில் பலர் வந்து போனார்கள். ஆனால் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை.
இப்போது 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் கமல் ஹாஸன். அதுவும் ஒரு படமல்ல... அடுத்தடுத்து இரு படங்களில் இணையவிருக்கிறார்கள்.
டி.கே. ராஜீவ் குமார் இயக்கும் இந்தப் படத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்க உள்ளார்கள். படத்துக்கு தலைப்பு அப்பா அம்மா விளையாட்டு என தலைப்பிட்டுள்ளனர்.
1989-ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைய உள்ளார் கமல். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடிக்க உள்ளார்.
இதனிடையே கமல் - ராஜீவ் குமாரின் கூட்டணி இன்னொரு படத்திலும் இணைகிறது. இந்தப் படத்தில் கமல் மகளாக ஷ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். கமலின் எழுத்தில் ராஜீவ் குமாரின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கும் இளையராஜா இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions