தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் அதிரடி நீக்கம் – அப்படி என்ன செய்தார் அவர்?

Bookmark and Share

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் அதிரடி நீக்கம் – அப்படி என்ன செய்தார் அவர்?

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அவரை எச்சரித்திருந்தது. ஆனால் அவதூறாக பேசியதற்கு அவர் அளித்த விளக்கம் சங்கத்துக்கு திருப்திகரமாக இல்லை.

எனவே சங்கவிதி எண் 14-D முறைப்படி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் விஷால் அவர்கள் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்றுமுதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17.08.2016 அன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக விஷால் பேசியதே இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். அப்படி அவர் என்ன பேசினார்.
இதோ:

” தயாரிப்பாளர் சங்கத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்யவேண்டும். ஒரு படத்தில் எப்படி லாபம் பார்ப்பது என்பதை பற்றி பேச அழைத்தால் யாரும் வர மாட்டேங்கிறாங்க. இதுவே ஒரு ஹீரோ அட்வான்ஸ் திருப்பி தரலைனா ‘ வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க”. இப்படி ஆவேசமாக விஷால் பேசியதுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆரம்பபுள்ளி.


Post your comment





Related News
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
விஷால் லைட்டைக் கொஞ்சம் உங்க பின்னாடி திருப்புறீங்களா?
திருட்டு விசிடி பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு.. விஷால் அதிரடி அறிவிப்பு
ஆவணங்களை திருடிய விஷால் மற்றும் குழு- போலீஸில் புகார்
விஷால் கல்யாணம் எப்போது - பதில் அளித்த விஷால் அப்பா ஜி கே ரெட்டி
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அடுத்த அதிரடி முடிவு
வலைதள விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது- விஷாலுக்கு பிரபல தயாரிப்பாளர் அதிரடி பதில்
விஷாலமான நடிகருக்கு வந்த டென்ஷன்! இப்படியா
எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை கோவில் வாசலில் பிச்சையெடுத்த அவலம் - விஷால் என்ன செய்தார் தெரியுமா?
தயாரிப்பாளர்களுக்காக விஷால் அதிரடி அறிவிப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions