இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம்!

Bookmark and Share

இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கிறது. தேர்தல் நாட்கள் நெருங்க நெருங்க இதன் பரபரப்பு மேலும் கூடியுள்ளது. இந்நிலையில் இத்தேர்தல் குறித்து கடந்த ஒரு வாரமாக நடிகர்கள், நாடக நடிகர்கள், துணை நடிகர்கள் மற்றும் எந்த ஒரு அணியிலும் சேராமலிருக்கும் உறுப்பினர்களிடையே ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

அதில் பாண்டவர் அணிக்கு 81% சரத்குமார் அணிக்கு 19% ஆதாரவு கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் இவ்விரு அணியினர் பற்றி சில விஷயங்களைக் கூறியுள்ளனர்.

சரத்குமாரின் பலமாக அவர்கள் கூறியதாவது:

பல மொழி பேச்சாற்றலால் எதையும் நம்ப வைக்கும் திறமை. இளமை மாறாமல் உடலை பராமரித்து ஒரு தலைவருக்கான அமைப்பில் இருப்பது. எந்த பஞ்சாயத்தாக இருந்தாலும் அழைப்பு இல்லாமல் அங்குசென்று தன்னை முன்னிலை படுத்திக்கொள்வது.

SPI Cinimas Agereement-ல் நீதிபதி வழங்கிய தனக்கு எதிரான தீர்ப்பை 5ஆண்டுகள் ஆகியும் சலிக்காமல் மறைப்பதற்கான பேசும் திறமை கொண்டிருப்பது.

தன்னை இளைஞர்களுடன் இணைத்துக்கொண்டு இலகுவாக பழகுவது, அரசியல் வளர்ச்சிக்காக நடிகர் சங்க தலைமை பதவியை பயன்படுத்துவது.

நாசரின் பலமாக அவர்கள் கூறியதாவது:

நான்கு மொழிகளில் நடித்து சாதனை செய்திருந்தாலும் எளிமையானவராகவே இருப்பது, இன்றும் நாடக நடிகனாகவே இருப்பது. எதிலும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் சக நண்பர்களுக்கு வாய்ப்புகளை விட்டுக்கொடுப்பது.

கலைஞர்களையும், மேம்படுத்த கனவுகளும், நடைமுறை திட்டங்களும் வைத்து சேவைசெய்ய காத்துக்கொண்டிருப்பது. 15 வருடங்களாக நடிகர் சங்க பிரச்சனைகளுக்கு தற்போது உள்ள நிர்வாகிகளிடம் தொடர்ந்து குரல் கொடுத்துவருவது.

மூத்த கலைஞர்களே… தலைவராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நம்பிக்கை பெற்றிருப்பது. நிர்வாக திறமையும் சேவை செய்யும் மனப்பான்மையும் உள்ள இளைஞர் படையை தன் பக்கம் வைத்திருப்பது.

சரத்குமாரின் பலவீனமாக அவர்கள் கூறியதாவது:

SPI Cinimas Agereement போட்ட விதி மீறல்கள் உறுப்பினர்களுக்கு தெரிந்திருப்பது, 10 வருடம் பதவியில் இருப்பவர்களையே தன் அணியில் மீண்டும் நிறுத்தியிருப்பது.

10 வருடம் பொறுப்பில் இருந்தும் நலிந்த கலைஞர்களுக்கு எதுவுமே செய்யாது. பணம் சார்ந்த காசோலை மோசடி வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது.
தன் வசதிக்காக மைத்துனர் ராதாரவியின் அனைத்து அராஜக நாகரிகமற்ற பேச்சையும் ஏற்றுக்கொள்வது.

நாசரின் பலவீனமாக அவர்கள் கூறியதாவது:

எப்போதுமே எளிமையாக இருப்பது, இதுவரை எந்த தவறுகளும் செய்யாமல் பிரச்சனையில் மாட்டாமல் இருப்பது. இதுவரை சங்க நிர்வாகத்தில் அனுபவம் இல்லாதது. பொய்யான மனிதர்களிடையே உண்மையை மட்டும் பேசுவது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions