வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!

Bookmark and Share

வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!

விஷால் அணியினரின் ஆதரவாளர்கள் கூட்டம் சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது:

‘‘நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது பதவிக்காக அல்ல. நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டோம். அதற்கு சரியான பதில் எதுவும் இதுவரை வரவில்லை.

நடிகர் சங்க கட்டிடம் எங்கே? என்றுதான் கேட்டோம். மூலப் பத்திரத்தை கேட்கவில்லை. கட்டிடத்தைக் கேட்டால் பத்திரத்தை காட்டுகிறார்கள். எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் சரத்குமார், ராதாரவி ஆகிய இரண்டு பேர் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். அது சரியல்ல என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதற்கான விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை.

பூச்சி முருகன் பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு ஆதரவு தெரிவித்திருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருந்தால் பிரச்சினை இல்லை.

அவர் எந்த தயாரிப்பாளரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். நானும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்தான். எங்கள் அணியில் பல தயாரிப்பாளர்களும் உள்ளனர்.

கலைப்புலி தாணு அறிவிப்பின்படி எங்கள் ஆதரவை எப்படி சரத்குமார் அணிக்கு வழங்கமுடியும்? இதற்கெல்லாம் வருகிற 18-ந் தேதி இரவில் பதில் தெரிந்து விடும். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் அணியினர் அனைவரும் தினமும் கூட்டம் நடத்தி, நடிகர்-நடிகைகளிடம் நிறை-குறைகளை கேட்போம். நாங்கள் கேள்வி கேட்டால், ஆபாசமாக பேசுகிறார்கள்.

சாதி பிரச்சினையை எழுப்புகிறார்கள். என் மீது வழக்கு போடுகிறார்கள். திருப்பி நான் வழக்கு போட்டால் தாங்க மாட்டார்கள்,'' என்றார். நாசர் பேசும்போது, ‘‘நாங்கள் தனி நபர் அல்ல. எங்களை பற்றி ராதாரவி அவமரியாதையாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களை பற்றி அவமரியாதையாக பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?'' என்றார்.


Post your comment





Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!
விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு
நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் விஷாலுக்கு கொலை மிரட்டல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions