திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஷால் பேட்டி

Bookmark and Share

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஷால் பேட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கதிரேசன், தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் டி.ராஜேந்தர், ஞானவேல்ராஜா, நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் ரவி கொட்டாறக்கரா, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘உத்தா பஞ்சாப்’ இந்தி படம் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியான விவகாரம், ‘பெப்சி’ தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை, திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் விஷால், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

திரை உலகில் திருட்டு வி.சி.டி.க்கள் பெரிய பிரச்சினையாக உள்ளது. ‘உத்தா பஞ்சாப்’ படம் திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து திரை உலகினர் ஒன்றுகூடி விவாதித்தோம். எந்த திரையரங்கில் திருட்டு வி.சி.டி. எடுக்கப்படுகிறதோ? அந்த திரையரங்குகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு நடந்தது நாளை யாருடைய படத்துக்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

வாரத்துக்கு 4, 5 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் திருட்டு வி.சி.டி.யாகவும் வெளிவந்து விடுகிறது. ஒவ்வொரு திரையரங்கிற்கும் படங்களை அனுப்புவதற்கும் ஒரு குறியீடு பதிவு செய்யப்படுகிறது. அந்த குறியீடு மூலம் எந்த திரையரங்கில் இருந்து திருட்டு வி.சி.டி. எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்.

நடிகர்களும் இதில் இணைந்து செயல்பட வேண்டும். பல கோடி ரூபாய் செலவு செய்து படங்களை தயாரிக்கிறோம். அவை திருட்டு வி.சி.டி.யாக வெளிவருவதால் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions