நடிகர் விஷால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி!

Bookmark and Share

நடிகர் விஷால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி!

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. அரசு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதவிகளும் வழங்கப்படுகின்றன. இதுதவிர பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனது ரசிகர் மன்றம் மூலம், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதிஉதவிகளை வழங்கினார். சென்னையில் பாரிமுனை, எழும்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு, அரிசி மற்றும் நிதிஉதவிகளை வழங்கினார்.

இதுபோல் ராகவா லாரன்சும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். மழையால் உணவு இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதற்காக தனியாக ஆட்களை ஏற்பாடு செய்து உணவு தயாரித்தார்.

அதை தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்பி உடனடியாக வழங்க ஏற்பாடு செய்து இருந்தார். இது தவிர பல்வேறு உதவிகளையும் தனது சொந்த ஏற்பாட்டின் மூலம் வழங்கினார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions