எங்கள் அணியில் உள்ளவர்கள் அரசியல் சாயம் இல்லாதவர்கள்: நடிகர் விஷால் பேட்டி

Bookmark and Share

எங்கள் அணியில் உள்ளவர்கள் அரசியல் சாயம் இல்லாதவர்கள்: நடிகர் விஷால் பேட்டி

சேலம் மாவட்ட நாடக நடிகர்களின் கலை குடும்பத்தின் சந்திப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர்கள் விஷால், நாசர், பொன்வண்ணன், கருணாஸ், சரவணன் ஆகியோர் சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் சேலம் மாவட்ட நாடக நடிகர்களின் கலை குடும்பத்தின் சந்திப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள். 

இந்த கூட்டத்திற்கு பிறகு நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடக்கிறது என்று முதன்முதலில் சங்க அலுவலகத்திற்கு சென்று கேள்வி கேட்டேன். ஆனால் அது தொடர்பாக சங்க நிர்வாகிகள் நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. 

நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நான் கேள்வி கேட்டதால் எனக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்தது. முதலில் யோசித்தேன். எனது பெற்றோரும் இது தேவையா? என்று கேட்டனர். பிறகுதான் நடிகர் சங்கத்தில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். 

நாடக நடிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு அவர்களது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எனது பெற்றோரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். அதன்படிதான் நடிகர்கள் நாசர், கருணாஸ், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட பல நடிகர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும் வரை ஓயமாட்டோம். சங்க உறுப்பினர் என்ற முறையில் கேள்வி கேட்பதற்கு உரிமை உள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளின் வீட்டு வாசலில் நின்று கேள்வி கேட்பேன். அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். 

நடிகர் சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்று உள்ளோம். விரைவில் தேர்தல் குறித்து அறிவிப்பு வர உள்ளது. எங்களது அணியில் உள்ளவர்கள் அரசியல் சாயம் இல்லாதவர்கள். தற்போது எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். 

பதவிக்கு வந்தால்தான் நல்லது நடக்கும் என்றால் நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடக்கிற ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும் நடிகர் சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்துவது தொடர்பாகவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை ஒட்டுமொத்த நடிகர்கள் திரண்டு விரைவில் சந்தித்து முறையிட உள்ளோம். 

சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் முதல்–அமைச்சரும் தேர் தலில் ஓட்டு போட வரவேண்டும் என்று அவரிடம் நாங்கள் வலியுறுத்துவோம். 

இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions