நடிகர் விஷால் தவறான தகவல்களை பரப்புகிறார்: நடிகர் சங்கம் கண்டனம்

Bookmark and Share

நடிகர் விஷால் தவறான தகவல்களை பரப்புகிறார்: நடிகர் சங்கம் கண்டனம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி நிற்கிறார்.

நடிகர் விஷால் தலைமையில் இன்னொரு அணியும் களத்தில் குதித்துள்ளது. இரு அணியினரும் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் விஷால் நடிகர் சங்க நிர்வாகிகள் மீது பரபரப்பான புகார் கூறியுள்ளார். திரையுலகின் மூத்த தலைவரான கருணாநிதி நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போடமுடியாது.

அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது என்று குற்றம்சாட்டினார். விஷால் குற்றச்சாட்டுக்கு நடிகர் சங்க துணைத்தலைவர் கே.என்.காளை பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது;-

நடிகர் விஷால் உண்மை தெரியாமல் பேசி வருகிறார். தேர்தலை மனதில் வைத்து தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதி பற்றி அவர் கூறிவரும் கருத்துக்கள் ஆதாரமற்றவை. தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு.

எனது அண்ணன் நடத்திய தேவி நாடக சபாவில்தான் கருணாநிதி தான் எழுதிய ‘மந்திரி குமாரி’ நாடகத்தை முதன்முதலாக அரங்கேற்றம் செய்தார். நடிகர் சங்கத்தில் கருணாநிதி 11-3-89-ல் கவுரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார். கவுரவ உறுப்பினருக்கு ஓட்டுரிமை கிடையாது என்று நடிகர் சங்க விதியில் இருக்கிறது. இது கருணாநிதிக்கே தெரியும்.

இதுவரை நடிகர் சங்க தேர்தல்களில் கருணாநிதி ஓட்டுப்போட்டது இல்லை. விஷாலும் அவரது அணியினரும் பொய்யான தகவலை வெளியிட்டு இந்தப்பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு கே.என்.காளை கூறினார். 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions