நிஜத்தில் உள்ள போலீஸ் அதிகாரி கெட்டப்பில் விஷால்

Bookmark and Share

நிஜத்தில் உள்ள போலீஸ் அதிகாரி கெட்டப்பில் விஷால்

பாண்டியநாடு படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் விஷால் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு போலீஸ் வேடம் என்ற தகவல் அடிபட்டது. அது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே சத்யம், வெடி ஆகிய படங்களில் விஷால் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் விஷால் ஏற்றுள்ள போலீஸ் கேரக்டரை வித்தியாசமாக டிசைன் செய்திருக்கிறாராம் சுசீந்திரன்.  

அதற்காக நிஜத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பலரையும் நினைவில் நிறுத்தி கடைசியில் ஒரு போலீஸ் அதிகாரியின் கெட்டப்பை விஷாலுக்குப் பொருத்தி பார்த்திருக்கிறார். அந்த கெட்டப் திருப்திகரமாக இருக்கவே விஷாலுக்கு அந்த கெட்டப்பை இறுதி செய்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரியின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது.  

சென்னையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்க உள்ளனர். ஆனால் இந்த ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மட்டுமின்றி பெரும்பாலும் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. காரணம் இந்தப்படத்தை தெலுங்கில் நேரடிப்படம் போல் வெளியிட உள்ளனர்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions