கமல் குறித்து ராதாரவி தவறாக பேசியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: நடிகர் விஷால் ஆவேசம்

Bookmark and Share

கமல் குறித்து ராதாரவி தவறாக பேசியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: நடிகர் விஷால் ஆவேசம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். 

இதுதொடர்பாக நேற்று திருச்சி தேவர் ஹாலில் நாடக நடிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நடிகர் ஜெரால்டு மில்டன் தலைமை தாங்கினார். 

இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது:– நடிகர் சங்க தேர்தலில் பதவி நாற்காலியை பிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஊர் ஊராக செல்லவில்லை. சினிமா எனது குடும்பம். அதில் நாடக கலைஞர்களும் அங்கம். அவர்களின் நலனுக்காக குரல் கொடுத்தால் அது தவறா? 

நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன. நடிகர் சங்கம் பற்றி விஷால் மட்டுமல்ல எல்லா நடிகர்களும் இனி கேள்வி கேட்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த் உள்பட அனைவரும் வரிசையில் நின்று ஓட்டு போட வேண்டும். மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள், நிச்சயம் ஒரு மாற்றம் வந்தாக வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:– தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது. நடிகர் சங்க தேர்தலில் மூத்த சினிமா கலைஞர் என்ற அடிப்படையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட அனைத்து முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வாக்களிக்கும்படி கேட்போம். 

கமலஹாசன் பற்றி ராதாரவி தவறாக பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன். கமலஹாசன் எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது அவருடன் நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன், ஜெரால்டு மில்டன், சரவணன், அலெக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நாடக நடிகர்கள் திரளாக பங்கேற்றனர்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions