தனியார் பேருந்து உரிமையாளர்களே, கொஞ்சம் விஷால் சொல்வதை கேளுங்க!

Bookmark and Share

தனியார் பேருந்து உரிமையாளர்களே, கொஞ்சம் விஷால் சொல்வதை கேளுங்க!

திருட்டு விசிடிகளை ஒழிப்பது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள கத்திச் சண்டை படம் வரும் 23ம் தேதி ரிலீஸாகிறது.

தற்போது எந்த படம் ரிலீஸானாலும் திருட்டு விசிடி உடனே வெளியாகிவிடுகிறது. இந்நிலையில் இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி நான் நடித்த 'கத்தி சண்டை' திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.திரைப்பட உலகில் அனைத்துதர மக்களின் உழைப்புடன் ஒரு திரைப்படம் வெளிவருகிறது.

அத்திரைப்படம் ஒரு சில விஷமிகளின் இழிச்செயலால் திருட்டு VCD யாக வெளிவருகிறது. அவ்வாறு வெளிவரும் VCD-க்களை உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்தில் திரையிடுகின்றனர், அவர்களுடைய இச்செயலால் திரைப்பட உலகில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.

திருட்டு VCDக்கு எதிராக நான் பல முறை குரல்கொடுத்து இருப்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இம் முறை நான் உங்களுடன் கைகோர்த்து குரல்கொடுக்க விரும்புகிறேன்.

நீங்கள் உங்களுடைய வாகனத்தில் புதிய படங்களை திரையிடாமல் இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் திரையுலகை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளிபெருக வழி வகுக்கும். எங்களில் நீங்களும் ஒருவராக இருந்து செயல்பட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Post your comment





Related News
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
`அவன் இவன்' படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா
விஷாலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மோதல்- யார் ஜெயிப்பார்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions