நடிகர் சங்கம் மீது அவதூறு: விஷாலுக்கு கே.என்.காளை கண்டனம்

Bookmark and Share

நடிகர் சங்கம் மீது அவதூறு: விஷாலுக்கு கே.என்.காளை கண்டனம்

நடிகர் சங்கத்துக்கு எதிராக விஷால் தவறான அவதூறுகளை பரப்புகிறார் என்று துணைத் தலைவர் கே.என்.காளை கண்டித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:–

சேலம் நாடக நடிகர்களுக்கு ஜே.கே.ரித்திஷ் ரூ. 10 லட்சம் வழங்கியதாகவும் அந்த பணம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் விஷால் கூறியுள்ளார்.

ஜே.கே.ரித்திஷ், நாடக நடிகர்களுக்கும் நலிந்த கலைஞர்களுக்கும் நிறைய உதவிகள் செய்துள்ளார். சேலம் நாடக நடிகர்களுக்கு கட்டிடம் கட்ட ரூ.1½ லட்சம் வழங்கினார்.

2007–ம் ஆண்டுக்கான சங்கத்தின் ஆண்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டு உள்ளது. சேலம் நாடக நடிகர்களும் அவர்களது ஆண்டறிக்கை புத்தகத்தில் ரூ. 1½ லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டு உள்ளனர்.

நாடக நடிகர்களுக்கு ஜே.கே.ரித்திஷ் வாங்கி கொடுத்த துணிமணிகளும் அந்தந்த மாவட்ட நாடக நடிகர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

எனவே ரூ.10 லட்சம் வழங்கியதாக உண்மைக்கு மாறாக பொய் தகவல்களை வெளியிடுவதை விஷால் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions