திருட்டு விசிடியை தடுக்க பஸ் அதிபர்கள் உதவ வேண்டும்: விஷால்

Bookmark and Share

திருட்டு விசிடியை தடுக்க பஸ் அதிபர்கள் உதவ வேண்டும்: விஷால்

பஸ் அதிபர்களுக்கு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள்...

“என் அன்புமிக்க சகோதர்களுக்கு வணக்கம்.

வருகின்ற 23ஆம் தேதி நான் நடித்த ‘கத்திசண்டை’ திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். திரைப்பட உலகில் அனைத்துதர மக்களின் உழைப்புடன் ஒரு திரைப்படம் வெளிவருகிறது. அத்திரைப்படம் ஒரு சில வி‌ஷமிகளின் இழிச்செயலால் திருட்டு விசிடியாக வெளிவருகிறது. அவ்வாறு வெளிவரும் அதை உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்தில் திரையிடுகின்றனர். அவர்களுடைய இச்செயலால் திரைப்பட உலகில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

திருட்டு விசிடிக்கு எதிராக நான் பல முறை குரல்கொடுத்து இருப்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இம் முறை நான் உங்களுடன் கைகோர்த்து குரல்கொடுக்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் உங்களுடைய வாகனத்தில் புதிய படங்களை திரையிடாமல் இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் திரையுலகை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளிபெருக வழி பிறக்கும். எங்களில் நீங்களும் ஒருவராக இருந்து செயல்பட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.


Post your comment





Related News
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
`அவன் இவன்' படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா
விஷாலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மோதல்- யார் ஜெயிப்பார்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions