நடிகர் மனைவிக்கு விஷால் மருத்துவ உதவி

Bookmark and Share

நடிகர் மனைவிக்கு விஷால் மருத்துவ உதவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் எம்.ஆர்.குகன். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார்.

ம்.ஆர்.குகனின் மனைவி சூர்யபிரபாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை தியாகராயநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு நரம்பு சம்பந்தமான நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.


தினமும் ரூ.17 ஆயிரம் செலவில் 6 ஊசி மருந்துகளை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த தொகையை குகன் குடும்பத்தினரால் கட்ட முடியவில்லை. இந்த தகவல் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு தெரிய வந்தது.

அவர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு பேசினார். மருத்துவ செலவு கட்டணத்தை குறைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மருத்துவ கட்டணம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அந்த தொகைக்கான காசோலையை விஷால் தனது அறக்கட்டளை மூலம் ஆஸ்பத்திரிக்கு செலுத்தி சிகிச்சை தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்தார்.


Post your comment

Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions