ஊழலை அம்பலப்படுத்த வாய்ப்பு கேட்கிறாராம் விஷால்!

Bookmark and Share

ஊழலை அம்பலப்படுத்த வாய்ப்பு கேட்கிறாராம் விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது சரத்குமார் அணி-விஷால் அணி என இரண்டுபட்டு நிற்கிறது. இதற்கு முன்பு இதேமாதிரி இருதரப்பினர் தேர்தலை சந்தித்தபோதெல்லாம் இதுபோன்று இரு அணியினரும் ஜென்ம விரோதிகள் போன்று நடந்து கொண்டதில்லை.

ஆனால் இந்த முறைதான் அரசியலுக்கு இணையாக நடிகர் சங்கம் ஒரு அனல் பறக்கும் தேர்தலை சந்திக்கப்போகிறது. குறிப்பாக, நாடக நடிகர்களை ஒரு பொருட்டாகவே நினைத்து பார்த்திராதவர்கள் இப்போது அவர்களிடம் ஓட்டு இருப்பதால், தேர்தல் நேரத்தில் கூவம் ஆற்றோரங்களிலும் இறங்கி அரசியல் தலைவர்கள் ஓட்டுக் கேட்பதை போன்று மதுரை, திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை என குக்கிராமங்களில் வாழும் நாடன நடிகர்களைத் தேடிச்சென்று இரண்டு அணியினரும் மாறி மாறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.  

மேலும், விஷாலைப்பொறுத்தவரை, தான் வாக்கு சேகரிக்க செல்லும் நாடக நடிகர்களிடம் வாக்கு வேண்டும் என்பதை வெளிப்படையாக கேட்காமல், நடிகர் சங்கத்தில் நடந்துள்ள ஊழலை அம்பலப்படுத்த எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் என்றுதான் கேட்கிறாராம்.

ஆனால் இதற்கு சில ஏரியாக்களில் ஆதரவு கிடைத்தாலும், சில ஏரியாக்களில் அவர் உள்ளே செல்வதற்கே அனுமதி கிடைப்பதில்லையாம். இருப்பினும், அங்கு முகாமிட்டு அவர்களை சமாதானப்படுத்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறாராம் விஷால்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions