சண்டக்கோழி 2-ம் பாகம் கைவிடப்பட்டது: விஷால் அறிவிப்பு

Bookmark and Share

சண்டக்கோழி 2-ம் பாகம் கைவிடப்பட்டது: விஷால் அறிவிப்பு

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சண்டக்கோழி’. யுவன் இசையமைத்த இப்படத்தை ஜி.கே நிறுவனம் தயாரித்தது. 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் ஈடுபட்டு வந்தார்கள். முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருந்தார் விஷால். மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியானது.

‘இந்நிலையில் சண்டக்கோழி 2’ படம் கைவிடப்பட்டதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே, ‘சண்டக்கோழி’ படம் கைவிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions