கேரள அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் விஷால்!

Bookmark and Share

கேரள அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் விஷால்!

தெரு நாய்களுக்கு எங்கே ஒரு பிரச்னை என்று கேள்விப்பட்டாலும் முதல் ஆளாக ஆதரவாக குரல் கொடுத்து வருபவர் த்ரிஷா. அந்த வகையில் பிராணிகள் நல வாரியத்திலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ள த்ரிஷா, தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாய் மட்டுமின்றி, குதிரை, குரங்கு என்று அனைத்து பிராணிகளிடமும் நெருங்கி பழகி வருகிறார்.

இந்த நிலையில், கேரளாவில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால், அவற்றை கட்டுப்படுத்துமாறு அங்குள்ள மக்கள் சார்பில் அரசை கேட்டுக்கொண்டு வந்தனர். அதையடுத்து, இப்போது தெருநாய்களை ஒழிக்கும் பணிகள் கேரளத்தில் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால், இதற்கு பிராணிகள் நலவாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளாவைப்போலவே சென்னையிலும் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் பிராணிகள் நலவாரியம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.

இதில் சமூகஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். அதோடு நடிகர் விஷாலும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொள்கிறாராம். அப்போது, பிராணிகளுக்கு ஆதரவாகவும், கேரள அரசுக்கு எதிராகவும் குரல் அவர் கொடுக்கப்போகிறாராம்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions