நாடக நடிகர்களுக்கு ரூ.1000 மானியம் வழங்குவேன்: ஐசரி கணேஷ் வாக்குறுதி

Bookmark and Share

நாடக நடிகர்களுக்கு ரூ.1000 மானியம் வழங்குவேன்: ஐசரி கணேஷ் வாக்குறுதி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை.

ஆனால் நான் எதிர் பார்த்தேன். நான் நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன். எனது தந்தை ஐசரிவேலன் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறேன்.

அந்த அறக்கட்டளை சார்பில் நலிந்த நாடக நடிகர்கள் 150 பேருக்கு 12 ஆண்டுகளாக ரூ.500 வீதம் மானியம் வழங்கி வருகிறேன். இனி இப்போது முதல் மானிய தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல் கல்வியாளர் ஜேப்பியார் சார்பில் 300 நாடக நடிகர்களுக்கும் கல்வியாளர்கள் பச்சமுத்து, வெங்கடாசலம், ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் 300 பேருக்கு மானியம் வழங்க முன்வந்து இருக்கிறார்கள். நடிகர் சங்கம் சிபாரிசு செய்யும் நாடக நடிகர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.

மேலும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சார்பில் 3 ஆயிரம் பேரக்கு மருத்துவ இன்சூரன்ஸ் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க உறுப்பினர்களின் மகன், மகள் அல்லது பேரன்– பேத்திகள் 100 பேருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசமாக கல்வி அளிக்கப்படும்.

இதேபோல் மற்ற பல்கலைக் கழகங்களிலும் 100 பேரை சேர்க்க ஏற்பாடு செய்யப்படும். நடிகர் சங்கம் சிபாரிசு செய்பவர்களுக்கு இந்த கல்வி உதவி வழங்கப்படும். நடிகர் சங்கத்துக்கு மிக விரைவில் அடுத்த ஆண்டே கட்டிடம் கட்ட வேண்டும். இதற்கு நாங்கள் உதவி செய்யத் தயாராக உள்ளோம்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions