நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் : நடிகர் விஷால்

Bookmark and Share

நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் : நடிகர் விஷால்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ அது எப்போதும் எங்களை பாதிக்கப்போவதில்லை. மாற்றத்தை ஏற்படுத்தவே தாங்கள் களம் இறங்கியுள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

ஜூலை 15ம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த தேர்தலுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் உத்தரவு குறித்து, தனியார் டி.வி. சேனலுக்கு, நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,  ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்க தேர்தலுக்கு, ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்திருப்பதே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.

எங்களுக்கு தேர்தலில் வெற்றி முக்கியமல்ல. மாற்றத்தை நிச்சயமாக உருவாக்குவதற்காகவே, இளம்நடிகர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இங்கு களம் இறங்கியுள்ளோம்.

மதுரை நாடக நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டித்தருவோம் என்று அவர்களிடம் உறுதியளித்தபடி நிச்சயம் நிறைவேற்றுவோம். இதற்கும், தேர்தலுக்கு எவ்வித சம்பந்தமுமில்லை.

அடுத்த மாதத்தில், இந்த கட்டடம் கட்டுவதற்கான பணிகள் உறுதியாக துவங்கும். இதற்காக, இளம் நடிகர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல், ஒரு படத்தில் நடித்துக்கொடுக்க உள்ளோம்.

இந்த பணத்தை கொண்டு, நாடக நடிகர்களின் வசதிக்காக, புதிய கட்டடம் கட்டப்படும். மலையாள நடிகர் சங்கம் (AMMA), இந்த முயற்சியை வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. அவர்களை பின்பற்றியே, இளம்நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடித்து, நாடக நடிகர்களுக்காக கட்டடம் கட்ட நிதியுதவி செய்யும் முயற்சியை தாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions