இவன் யாரென்று தெரிகிறதா டிரைலரை வெளியிட்ட விஷால்!

Bookmark and Share

இவன் யாரென்று தெரிகிறதா டிரைலரை வெளியிட்ட விஷால்!

‘இவன் யாரென்று தெரிகிறதா’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. ரொமான்ஸ் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் விஷ்ணு, ‘வெற்றிவேல்’ புகழ் வர்ஷா மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள், ராமச்சந்திரன், அர்ஜுனன், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலரை விஷால் வெளியிட்டார்.

டிரைலரை வெளியிட்ட பின்பு விஷால் பேசியதாவது, ‘‘இந்த டிரைலர் முழுக்க முழுக்க வண்ணமயமாகவும், காமெடி கலாட்டாவாகவும் உருவாகியிருப்பதை என்னால் உணரமுடிகிறது. ‘இவன் யாரென்று தெரிகிறதா’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்றார்.

இயக்குனர் சுசீந்திரனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தை, ஓன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக டி.அசோக்குமார் தயாரித்துள்ளார். ‘மஞ்சப்பை’ புகழ் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions