‛கத்தி சண்டை’-யை வாங்கிய கேமியோ பிலிம்ஸ்

Bookmark and Share

‛கத்தி சண்டை’-யை வாங்கிய கேமியோ பிலிம்ஸ்

‘பிளாக் அண்ட் வைட்’ காலம் முதல் இன்று வரை திரையுலக அகராதியில் மிக முக்கியமான சொல்லாக கருதப்படுவது ‘கேமியோ’ (சிறப்பு தோற்றம்)…. அப்படிப்பட்ட வலுவான பெயரை கொண்டு தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்த ‘கேமியோ பிலிம்ஸ்’ – சி ஜெ ஜெயக்குமார் தற்போது வர்த்தக உலகில் ஆழமாக கால் பதித்து, தொடர் வெற்றி பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறார்.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ‘கேமியோ பிலிம்ஸ்’ – சி ஜெ ஜெயக்குமார், தற்போது அவரின் அடுத்த தயாரிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த வர்த்தக உலகினரின் கவனத்தையும் ஈர்த்துளார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து, அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா, இந்தி திரையுலகின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் என இதுவரை எவரும் கண்டிராத, பிரம்மாண்டமான நட்சத்திர கூட்டணியில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இப்பொழுது முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் சி ஜெ ஜெயக்குமார், தற்போது விஷால் – தமன்னா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தி சண்டை’ படத்தின் தமிழ் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறார்.

“சிறந்த நட்சத்திர கூட்டணி, வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள், தரமான, அதே சமயத்தில் ரசிகர்கள் ஆர்வத்தோடு ரசிக்கக்கூடிய கதைக்களம், ஆகிய மூன்றும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் செயல்படுகின்றது.
அந்த வகையில், விஷால் – தமன்னா – தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூரி மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோருடன் ‘கத்தி சண்டை’ படம் மூலம் கைக்கோர்த்து இருப்பது, எங்கள் ‘கேமியோ பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.

முழுக்க முழுக்க அதிரடி கலந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் ‘கத்தி சண்டை’ நிச்சயமாக ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும்…பல வருடங்கள் கழித்து வடிவேலு சார் நடிக்கும் இந்த ‘கத்தி சண்டை’ படத்தில் நாங்கள் இணைந்திருப்பது, எங்கள் ‘கேமியோ பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு கிடைத்த மிக பெரிய பெருமை.

அதுமட்டுமின்றி, முதல் முறையாக ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் திரு. நந்தகோபால் அவர்களோடு கைக்கோர்த்து இருப்பது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

நாங்கள் ‘கத்தி சண்டை’ படத்தை வருகின்ற நவம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்…. நிச்சயமாக எங்களின் ‘கத்தி சண்டை’ திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்… ” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘கேமியோ பிலிம்ஸ்’ – சி ஜெ ஜெயக்குமார்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions