நெருங்குகிறது நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டு வேட்டையை தொடங்கினார் விஷால்

Bookmark and Share

நெருங்குகிறது நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டு வேட்டையை தொடங்கினார் விஷால்

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனேகமாக ஜூலை மாதம் நடக்கலாம் என்று தெரிகிறது. நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்களின் வாக்குகள்தான் அதிகம். நாடக நடிகர்களின் வாக்குகளை பெற்றவர்கள்தான் பொறுப்புக்கு வர முடியும்.

தற்போதைய பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நாடக நடிகர்களிடையே கணிசமான செல்வாக்கு உண்டு. அதனால்தான் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதனை உடைத்து நாடக நடிகர்களை தன் பக்கம் இழுக்கும் வேலையை தொடங்கிவிட்டார் விஷால். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ஒவ்வொரு ஊராகச் சென்று நாடக நடிர்களை சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி நேற்று புதுக்கோட்டை சென்ற விஷால் அங்கு முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்துப் பேசினார். "திரைப்பட நட்சத்திரங்கள் நாடக நடிகர்களுக்கு உரிய மதிப்பையும், கவுரவத்தையும் கண்டிப்பாக வழங்குவார்கள்.

அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று அவர்களுக்கு உறுதி அளித்தார். முன்னதாக நாடக நடிகர்கள் விஷாலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய விஷால் "எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்றவர்களின் உழைப்பில் உருவான நடிகர் சங்கத்து சொத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள முடியாது.

திருமண மண்டபம், திரையரங்கத்துடன் கூடிய புதிய சங்கத்தை கட்ட வேண்டும். நடிகர் சங்க உறுப்பினர்கள் இலவசமாக அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. நாடக நடிகர்கள் என்னை பார்க்க விரும்பினார்ள். அதற்காகவே வந்தேன்" என்னார். புதுக்கோட்டையைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரைக்கும் செல்ல விஷால் முடிவு செய்துள்ளார்.

கணிசமா அளவு நாடக நடிகர்கள் இந்த மாவட்டங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுடன் நடிகர் கருணாசும் உடன் செல்கிறார்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions