பிறந்தநாளில் சபதம் எடுக்கும் விஷால்!

Bookmark and Share

பிறந்தநாளில் சபதம் எடுக்கும் விஷால்!

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாயும் புலி’ . இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதை தவிர பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார்.

விஷால் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்விக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார். இவருக்கு நாளை பிறந்தநாள்.

இந்த ஆண்டு பிறந்த நாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட இருக்கிறார். மேலும் பிறந்த நாளை முன்னிட்டு இனிமேல் பார்ட்டிகளில் கலந்துக் கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். கல்வி, பள்ளி குழந்தைகள் மீது அதிக ஆர்வம் இருக்கிறதாம். இதனால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய இருப்பதாகவும் சபதம் எடுத்திருக்கிறார்.

விஷாலுக்கு இன்றைய இளம் நடிகர்களான, ஆர்யா, விஷ்ணு, விக்ராந்த் உள்ளிட்ட பலர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.

இவர்களுடைய படங்களின் வெற்றி, பிறந்த நாள் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு பார்ட்டி கொடுப்பது வழக்கம். ஆனால், இனிமேல் விஷால் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருப்பதால், இவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions