எனக்கு பதவி வேண்டாம்; விஷால்

Bookmark and Share

எனக்கு பதவி வேண்டாம்; விஷால்

நடிகர் விஷால் இன்று தனது பிறந்த நாளையொட்டி முதியோர், ஆதரவற்றோர் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.  

இலங்கை அகதிகள் முகாமில் வாழும் குழந்தைகள் அனைவருடைய கல்விச் செலவையும் நான் ஏற்கிறேன். இதை நான் மட்டும் தனியாக செய்ய முடியாது. எனவே, நண்பர்கள், தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த குழந்தைகள் படிப்பதற்கு ஆகும் முழு செலவையும் வழங்குவேன்.

இவர்களுக்கு மட்டுமல்ல, ஏழை – எளிய குழந்தைகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கல்விக்கு உதவ வேண்டும் என்பது என் லட்சியம். என்னை ஒரு நல்ல நடிகனாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.

நான் மட்டுமல்ல, எனது நண்பர்கள் கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி ஆகியோரும் இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு  நாசர் போட்டியிடுகிறார்.  திருமணம் பற்றி நான் இன்னும் யோசிக்க வில்லை என்று விஷால் கூறினார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions