140 கிலோ வில்லனுடன் மோதிய விஷால்!

Bookmark and Share

140 கிலோ வில்லனுடன் மோதிய விஷால்!

சண்டக்கோழி, திமிரு, வெடி, பாண்டியநாடு, பாயும்புலி உள்பட பல படங்களில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தவர் விஷால்.

சத்யம் படத்தில் நடித்தபோதே சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடித்த அவர், சண்டை காட்சிகளில் யதார்த்தம் இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது நடித்துள்ள கதகளி படத்தில் ஒரு வில்லனுடன் மோதும் சண்டை காட்சியில் 6 நாட்களாக நடித்துள்ளார் விஷால்.

கதைப்படி இந்த படத்தில் மீகாமன், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான் உள்பட பல படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகர் ஆத்மாவும் நடித்திருக்கிறார். அவருக்கும், விஷாலுக்குமிடையே ஒரு ஷோலோ பைட் உள்ளதாம்.

அந்த காட்சியை 6 நாட்களாக பின்னி மில்லில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கினாராம் பாண்டிராஜ். படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சண்டை காட்சி என்பதால் இந்த காட்சிக்காக எந்தவொரு டூப்பும் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் விஷால்.அந்த வகையில், அவருடன் சண்டை செய்த நடிகர் ஆத்மா, 140 கிலோ வெயிட் கொண்டவர்.

இருப்பினும் அவரோடு சண்டை போடும் ஷாட்களில்கூட டூப் நடிகரை யூஸ் பண்ணாமல் நடித்தாராம் விஷால். அப்படி நடித்த அந்த காட்சி பிரமாதமாக வந்துள்ளதாம். அதனால் விஷால் இதுவரை நடித்த படங்களில் கதகளி படத்தின் ஆக்சன் காட்சிகள் தியேட்டருக்கு வரும்போது பெரிய கைதட் டல் பெறும் என்கிறார்கள்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions