போட்டியிடுவேன் நடிகர் சங்க தேர்தலில் - விஷால்

Bookmark and Share

போட்டியிடுவேன் நடிகர் சங்க தேர்தலில் - விஷால்

‘நாங்கள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்’ என்று கூறி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு விஷால் குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக நடிகர்–நடிகைகள், மற்றும் திரைப்படத்துறையின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்கள்.

விஷால் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது, இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கு முழு உதவி செய்வதாக அறிவித்தார். ‘அரசியல் நோக்கத்தில் இதை செய்யவில்லை. ஏழை குழந்தைகளுக்கு உதவுவது எனது லட்சியம்’என்று தெரிவித்தார்.  

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்ட போது, நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். . நான் நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

‘நடிக நண்பர்கள் உதவியுடன் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு மற்றும்  தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கும், அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை செய்வோம்’ என்றார். 


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions