“நட்சத்திர கிரிக்கெட்: விஷாலின் விளக்கமும் அஜித்தின் பெருந்தன்மையும்”

Bookmark and Share

“நட்சத்திர கிரிக்கெட்: விஷாலின் விளக்கமும் அஜித்தின் பெருந்தன்மையும்”

கடந்த ஞாயிறு அன்று தென்னிந்திய திரையுலகமே இணைந்து நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இரவு நடந்த ஒரு பார்ட்டியில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அஜித் பாடல் ஒன்றுக்கு நடிகர்கள் நடனம் ஆடியபோது அந்த பாடலை விஷால் அணைக்க சொன்னதாக செய்திகள் வெளிவந்தது.

இதுகுறித்து விஷால் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். பார்ட்டி நடந்த இடத்தில் சோடியம் விளக்கின் வெளிச்சம் அதிகமாக இருந்ததால் அந்த விளக்கை அணைக்குமாறு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா விஷாலிடம் கேட்டதாகவும், அவர் எழுந்து விளக்கை அணையுங்கள் என்று கூறியதை அஜித் பாட்டை அணணயுங்கள் என்று ஒருசிலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்தியாகி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து அஜித்துக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் தெரிவித்தபோது, '"அந்த இடத்தில் நீங்கள் இருந்தீங்களா அல்லது அங்கிருந்தவர்கள் யாராவது உங்களிடம் இப்படி நடந்தது என்று சொன்னார்களா" என்று அஜித் கேட்டதாகவும், "இல்லை" என்று சம்பந்தப்பட்டவர் கூறியவுடன் "அவ்வளவுதான் விடுங்கள்... அது ஒரு மேட்டரே இல்லை" என்று பெருந்தன்மையுடன் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


Post your comment





Related News
விஷால் படத்தில் உள்ள அஜித் கனக்ஷன்!
நடிகர் சங்கத்துக்காக நாடகம் போடும் விஷால்; விஜய், அஜித்துக்கு அழைப்பு இல்லையாம்!
எனக்கும் அஜித்துக்கும் எந்த பிரச்சினையுமில்லை: விஷால் பேச்சு
விஷாலுக்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய அஜித் ரசிகர்கள்!
விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய அஜித் ரசிகர்கள்!
"தல" அஜித் குறித்த சர்ச்சையால் கமிஷ்னரிடம் புகார் கொடுக்கும் கருணாஸ்
தல சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்த ஸ்ருதி
அஜித் ஆக ஆசைப்படும் விஷால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions