விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய அஜித் ரசிகர்கள்!

Bookmark and Share

விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய அஜித் ரசிகர்கள்!

தமிழ்சினிமாதான் நடிகர் அஜித்துக்கு பிரியாணி போடுகிறது. (எத்தனை காலத்துக்குத்தான் சோறு போடுகிறது என்றே எழுதுவது?) இந்த நினைப்பு அஜித்துக்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை.

அஜித்துக்கு கோடியாய் கோடியாய் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவரால் சிறு நன்மையும் கிடைப்பதில்லை.ஒரு படத்தின் வெற்றியில் அப்படத்துக்கு செய்யப்படும் புரமோஷனுக்குக் கணிசமான பங்கு உண்டு.

பிரஸ்மீட், இசைவெளியீட்டுவிழா, டிரெய்லர் வெளியீட்டுவிழா போன்ற படபுரமோஷன்களில் அப்படத்தின் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள வேண்டியது கடமை.இந்தக் கடமையை அஜித் செய்வதே இல்லை.

இதை செய்யத் தவறுவதன் மூலம் தன்னுடைய தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைய அஜித்தே காரணமாக இருக்கிறார்.

இதற்கும் மேலாக, தன்னை வாழ வைக்கும் திரைப்படத்துறையின் நல்லது கெட்டதுகளிலும் அஜித் கலந்து கொள்வதே இல்லை.

முக்கியமாக, அஜித் உறுப்பினராக அங்கம் வகிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிகழ்வுகளிலும் தலையைக்காட்டுவதில்லை.

சில மாதங்களக்கு முன் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றபோதும் அஜித் ஆப்சென்ட்.

அண்மையில் பொதுக்குழுவை கூட்டினார்கள். அதற்கும் அஜித் வரவில்லை.

தான் வர முடியாமல் போனதற்கான காரணத்தையும் நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தவில்லை.

இது தொடர்பாக, அஜித் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற விவாதம் திரைத்துறையிலும் ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாகவே நடைபெற்றுவருகிறது.

ஆனாலும் இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பாக அதிகாபூர்வமாக எந்தவொரு முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில்… அஜித்தின் ரசிகர்கள்மிக அருவறுப்பான ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.

அவர்களின் இந்த செயல் திரைத்துறையினர் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக விஷாலின் ரசிகர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் அஜித்துக்கு மிகப்பெரிய தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளது.

அஜித் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக நினைத்துக் கொண்டு அஜித் ரசிகர்கள், நடிகர் சங்க செயலாளரான விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வடிவமைத்து அதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதை யாரோ ஒரு அஜித் ரசிகரின் ஆர்வக்கோளாறு என்று எடுத்துக் கொள்வதா?

அல்லது… அஜித்தின் ஆசியுடன் பகிரப்பட்ட பகிரங்க மிரட்டல் என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை.

இது குறித்த உண்மையையாவது அஜித் வாயைத் திறந்து சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்ல, நடிகர் சங்கம் என்கிற பாரம்பர்யமிக்க அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ள சக நடிகரை கேவலப்படுத்தி இப்படியொரு போஸ்டரை பகிர்ந்த ரசிகர் யார் என கண்டறிந்து, கண்டிக்க வேண்டும்.

இதை அஜித் செய்யத்தவறினால், ரசிகர்கள் என்ற பெயரில் வன்முறைக்கூட்டத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்ற அவப்பெயரை சுமக்க வேண்டியதாகிவிடும்.

Post your comment

Related News
விஷால் படத்தில் உள்ள அஜித் கனக்ஷன்!
நடிகர் சங்கத்துக்காக நாடகம் போடும் விஷால்; விஜய், அஜித்துக்கு அழைப்பு இல்லையாம்!
எனக்கும் அஜித்துக்கும் எந்த பிரச்சினையுமில்லை: விஷால் பேச்சு
“நட்சத்திர கிரிக்கெட்: விஷாலின் விளக்கமும் அஜித்தின் பெருந்தன்மையும்”
விஷாலுக்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய அஜித் ரசிகர்கள்!
"தல" அஜித் குறித்த சர்ச்சையால் கமிஷ்னரிடம் புகார் கொடுக்கும் கருணாஸ்
தல சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்த ஸ்ருதி
அஜித் ஆக ஆசைப்படும் விஷால்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions