நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

நடிகர் சங்க கட்டட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இதில் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் கேப்டன்களாக களமிறங்குகிறார்கள். மேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. அந்த அணிகளின் பெயர்கள் ‘மதுரை காலேஜ்’, ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’, ‘கோவை கிங்ஸ்’ மற்றும் ‘சேலம் சீட்டாஸ்’ ஆகும். அணிக்கு 6 நடிகர்களாக மொத்தம் 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். இந்த போட்டிகள் 6 ஓவர் போட்டிகளாக நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியை மேலும் சிறப்பாக்கும் விதமாக நடிகைகள் நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒவ்வொரு அணிக்கும் தூதுவர்களாக இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions