இசைவெளியீட்டு விழாவிற்கு வந்துவிடாதே: ஆர்யாவை எச்சரித்த விஷால்!

Bookmark and Share

இசைவெளியீட்டு விழாவிற்கு வந்துவிடாதே: ஆர்யாவை எச்சரித்த விஷால்!

 நாளை ஆகஸ்ட் 2ம் தேதி பாயும் புலி படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருக்கிறது, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு நடிகரும் விஷாலின் நெருங்கிய நண்பருமான ஆர்யாவை வரவேண்டாம் என கூறியுள்ளார் விஷால். 

ட்விட்டரில் இதைத் தெரிவித்துள்ளார் விஷால் ” டியர் ஜாம்மி தயவு செய்து எனது இசை வெளியீட்டிற்கு வரவேண்டாம். சென்ற முறை நீ பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய். இந்த முறை வராதே. லவ் யூ , கடவுள் ஆசீர்வாதங்கள்” எனக் கூறியுள்ளார் விஷால். இது சற்றே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

’ஆம்பள’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது என்ன மச்சான் அதே தேதியில சில பெரிய படங்கள் வெளியாகுதே, எனக் கேட்ட போது எவனா இருந்தாலும் வெட்டுவேன் என விஷால் கூறியதாக, ஆர்யா மேடையில் பேசியது பரபரப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

எனவே தான் இப்படி சொல்லியிருக்கிறார் விஷால். அதே நாளில் அஜித்தின் ’என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’ படங்கள் வெளிவர இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஆர்யா இப்போதே ட்விட்டரில் ” எங்கள் அண்ணன் புரட்சித் தளபதியின் இசை வெளியீடு விரைவில்” என ட்வீட் செய்து ஸ்மைலி குறியீட்டை வெளியீட்டுள்ளார். 

 


Post your comment





Related News
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
`அவன் இவன்' படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
விஷால் – ஆர்யா – சமந்தா படம் இன்று தொடங்கியது!
மீண்டும் ஒருபடத்தில் இணைந்து நடிக்கும் விஷால், ஆர்யா!
மருது படத்தை டிவிடியில் பார்த்தால் விஷால் என்ன செய்வார் – ஆர்யா சொல்கிறார்!
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!
ஆர்யா செய்த தவறை சுட்டி காட்டிய விஷால்!
விக்ராந்துக்காக ஆட்டம் போட்ட விஷால்-ஆர்யா-விஷ்ணு
நடிகர் சங்கத்துக்காக இணையும் ஐவர் கூட்டணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions