ஆர்யா செய்த தவறை சுட்டி காட்டிய விஷால்!

Bookmark and Share

ஆர்யா செய்த தவறை சுட்டி காட்டிய விஷால்!

நடிகர் விஷால் நேற்று நடந்த எஸ்.எஸ்.ஆர் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பங்கேற்று பேசும்போது அவன் இவன் படப்பிடிப்பு சமயத்தில் நானும் ஆர்யாவும் ஒன்றாக தான் இருந்தோம், இடைவெளியின் போது நடிகை அம்பிகா அம்மாவை பார்த்து, ”யார் மச்சான் அவங்க… புது முகமா என்று கேள்வி கேட்டான்”, அடப்பாவி என்று அவர்களின் படங்களை போட்டு காண்பித்து அவர்கள் சாதித்த பெருமைகளை பற்றி சொன்னேன்.

சில வீடியோக்களை பார்த்த ஆர்யா இவர்கள் 10 அசினுக்கு சமம் என்று தவறை உணர்ந்து, அம்பிகா அம்மாவிடம் மன்னிப்பு கேட்டான். இன்றைய நடிகர்கள் கண்டிப்பாக மூத்த நடிகர்களின் வழித்தடங்களை தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் இனிமே எங்கள் கூடவே இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் ஆத்மாக்கள் தான் எங்களை நடிகர் சங்க கட்டிடத்துக்கா போராட தூண்டுகிறது என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions