பாலாவின், "அவன் இவன் படத்தில் இணைந்து நடித்த, விஷால் - ஆர்யா இருவரும் உயிர் நண்பர்களாகி விட்டனர்.
படப்பிடிப்பு தளம், சினிமா நிகழ்ச்சிகள் என, அவர்கள் எங்கு சந்தித்துக் கொண்டாலும், அந்த இடத்தில், நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. அந்த அளவுக்கு, ஜாலியாக பேசி மகிழ்வர்.
இந்த நட்பு காரணமாக, தற்போது விஷால் நடித்து வரும், 'மதகஜராஜா' படத்தில், ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார் ஆர்யா. நிஜத்தில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால், எவ்வளவு கலகலப்பாக பேசி மகிழ்வரோ, அதேபோல், இந்தப் படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சியையும், நகைச்சுவை கலாட்டாவாக படமாக்கி உள்ளார் சுந்தர்.சி.
Post your comment
| Related News | |
![]() |


