விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை

Bookmark and Share

விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வந்த, அசோக்குமார் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமை தான் காரணம் என்றும், அதுகுறித்து அசோக்குமார் எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்திருக்கிறது. அதில் தற்கொலைக்கு அன்புச்செழியனின் தொல்லை தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் அசோக் குமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்!

கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இன்று தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.

விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.

காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல. கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விஷால் தலைவர், தயாரிப்பாளர் சங்கம் இவ்வாறு கூறியிருக்கிறார். 

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions