
நடிகர் விஷால் சமீபத்தில் தனது பெயரில் ரசிகர் மன்றத்தை துவக்கினார். இதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.
சென்னையில் ஆட்டோ டிரைவர்களுக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விஷால் சீருடைகள் வழங்கினார். இதில் அகில இந்திய விஷால் ரசிகர்மன்ற தலைவர் ஜெயசீலன் சென்னை மாவட்ட தலைவர் தேவா மற்றும் ஹரி ஆகியோர் பங்கேற்றனர்.
திருச்சியில் அடுத்த மாதம் (ஜூன்) 21–ந்தேதி 10 ஏழைகளுக்கு இலவச திருமணங்களையும் விஷால் நடத்தி வைக்கிறார். திருச்சி மாவட்ட தலைவர் பென்னி மற்றும் சண்முகம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்திக்கவும் விஷால் திட்டமிட்டு உள்ளார்.
Post your comment
Related News | |
![]() |
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries