என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்

Bookmark and Share

என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் இரும்புத்திரை. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால், அர்ஜுன், இயக்குனர் மித்ரன், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் விஷால் பேசும்போது, ‘இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. 

இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார்.

ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். 

ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும், தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது. 

ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது.  படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி என்றார் விஷால்.


Post your comment





Related News
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
சாதனை இயக்குனரின் படைப்பில் உருவாகி உள்ள நாகேஷ் திரையரங்கம்.!
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.!
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions