நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைப்போம்: நடிகர் விஷால் உறுதி

Bookmark and Share

நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைப்போம்: நடிகர் விஷால் உறுதி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் நடிகர் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் மூத்த உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஓட்டளிக்க அழைப்பு விடுப்போம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள பூந்தமல்லி கீழ்மாநகரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு, அம்மனின் தரிசனம் பெற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, நடிகர் சங்க வாக்காளர் பட்டியலில் மூத்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இல்லாதது அவமானகரமானதாக உள்ளது. நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுக்கவுள்ளோம்.

அவரை சந்திப்பதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவர் எப்போது அழைக்கிறோரோ, அப்போது சந்தித்து அவர் மூத்த உறுப்பினர் என்ற முறையில் வாக்களிக்க அழைப்பு விடுப்போம். முதலமைச்சர் வாக்களித்தால் அதைவிட மிகுந்த மகிழ்ச்சி எதுவும் எங்களுக்கு இல்லை. எனவே கண்டிப்பாக அவர் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions