விஷாலை தொடர்ந்து கேப்டன் பதவியை துறந்த ஜீவா!

Bookmark and Share

விஷாலை தொடர்ந்து கேப்டன் பதவியை துறந்த ஜீவா!

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் கலந்துகொள்ளும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த சென்னை ரைனோஸ் அணிக்கு சரத்குமார், விஷால் ஆகியோர் இதுவரை கேப்டன்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் இந்த வருட சீசனில் ஜீவா, சென்னை அணியின் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டார். ஆனால் தற்போது ஜீவா கேப்டன் பதவியில் இருந்து விலகியிருப்பதாகவும் அவருக்கு பதிலாக ஆர்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions