கள்ளபடத்தின் இசையை வெளியிட்டார் விஷால்

Bookmark and Share

கள்ளபடத்தின் இசையை வெளியிட்டார் விஷால்

நடிகர் விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும், வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். வி மியூசிக் நிறுவனத்தை விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கவனித்துக் கொள்கிறார்.

வி மியூசிக் இதுவரை பூஜை, ஆம்பள படங்களின் பாடல்களை வெளியிட்டது. இசை, காக்கி சட்டை படங்களின் டிஜிட்டல் காலர் டியூனை வெளியிட்டது. இப்போது முதன் முறையாக ஒரு வெளி பட ஆடியோவை வெளியிட்டுள்ளது. மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கி உள்ள கள்ளபடத்தின் ஆடியோ உரிமத்தை வாங்கி உள்ளது.

இதற்கு கே. இசை அமைத்துள்ளார். ஒரு தனியார் பன்பலை ரேடியோவில் இன்று (பிப் 25) கள்ளப்படத்தின் பாடல்களை வெளியிட்டார் விஷால். இதில் இயக்குனர் வடிவேல், நடிகர் ஸ்ரீமன் சந்தோஷ், இசை அமைப்பாளர் கே. எடிட்டர் நரேன், கேமராமேன் ஜிஷ்னு ஆகியோர் அவரவர் கேரக்டர்களாக நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர தம்பி ராமையா, லட்சுமிப்ரியா நடித்துள்ளனர். நாட்டுப்புற கலையை வைத்து ஒரு சினிமா எடுக்க முயற்சிக்கும் இவர்கள் படும் அவஸ்தைகள்தான் படம்.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions