தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு!

Bookmark and Share

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு!

நடிகர் சங்க நிர்வாகிகள் கருணாநிதியை நேற்று திடீரென்று சந்தித்து பேசினர். அப்போது அவர், அமைதியான முறையில் சங்கத்தை வழிநடத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்தார்.

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசி, வாழ்த்து பெற்றனர். இந்தநிலையில் நேற்று மாலை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர்கள் சந்தித்து பேசினர்.

நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்டோர் கருணாநிதியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு ½ மணிநேரம் நீடித்தது. பின்னர் வெளியே வந்த நடிகர் சங்க தலைவர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மூத்த கலைஞர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். அவர் எங்களிடம் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார். இந்த சந்திப்பு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் நடிகர் சங்கத்தை வழிநடத்தி செல்லும்படி எங்களுக்கு அறிவுரை வழங்கினார். நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு அவருக்கு நாங்கள் அழைப்பு விடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post your comment





Related News
ரஜினியை விமர்சித்த ஸ்டாலின், கலைஞருடன் சந்திப்பில் நடந்தது என்ன?
செவாலியே விருது: கமல்ஹாசனுக்கு கருணாநிதி வாழ்த்து
நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல் இரங்கல்
அருள்நிதி திருமணம் - கருணாநிதி நடத்தி வைத்தார்!
கருணாநிதிக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்..!
ரஜினியிடம் நலம் விசாரித்தார் கருணாநிதி.!
கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா
இயக்குநர் செல்வராகவன் திருமண வரவேற்பு;கருணாநிதி நேரில் வாழ்த்து
ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல : கருணாநிதிக்கு ரஜினி ஆறுதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions