நடிகர் சங்க கட்டிடம் அமைவது குறித்து விஷால் விளக்கம்..!

Bookmark and Share

நடிகர் சங்க கட்டிடம் அமைவது குறித்து விஷால் விளக்கம்..!

நடிகர் சங்க கட்டிடம் முதலில் நடிகர்களுக்கு உரியதாக இருக்க வேண்டும்.

இதில் நாடக அரங்கம் மற்றும் திரைப்படம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு வசதியான இடமாக இது அமையும். 19 கிரவுண்டு நிலம் இருக்கிறது. எனவே தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படும். 

இந்த கட்டிடத்தை எப்படி கட்டுவது என்று முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் இடம் பெறுவார்கள். அவர்கள் ஆலோசனைப்படி முடிவு செய்து அதன்படி கட்டிடம் கட்டப்படும்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கலை நிகழ்ச்சி நடத்த மாட்டோம். இளம் நடிகர்கள் சேர்ந்து தனியாக சினிமா எடுத்து நிதி திரட்டுவோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டுவோம். அரசியல் தொடர்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோம்’ என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions