நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது

Bookmark and Share

நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். கடந்த மார்ச் மாதம் பொதுக்குழுவை கூட்டி சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முடிவுகள் எடுத்தனர். அதன்படி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி கட்டிட நிதி திரட்டப்பட்டது. அந்த தொகை போதாது என்பதால் விஷால், கார்த்தி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் புதிய படங்களில் நடித்து அதில் கிடைக்கும் சம்பள தொகையை கட்டிட நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சங்கத்தின் வரவு, செலவில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி அவர்களுக்கு விளக்க நோட்டீசுகள் அனுப்பப்பட்டன. பின்னர் 3 பேரும் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள். தங்களை நீக்கியது செல்லாது என்றும் இதனை சட்டப்படி சந்திப்போம் என்றும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையில் புதிய நிர்வாகிகள், சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக போட்டுள்ள ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அதிருப்தியாளர்கள் சிலர் புகார் கூறி, நடிகர் சங்க அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போலீசிலும் புகார் அளித்துள்ளனர். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வசூலான கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். இதனை ஏற்று சங்கத்தின் பொருளாளர் கார்த்தி கணக்கு விவரங்களை நடிகர் சங்க இணையதளத்தில் வெளியிட்டார்.

நடிகர் சங்கத்துக்கும் நடிகர் சங்க அறக்கட்டளைக்கும் மொத்தம் ரூ.15 கோடியே 32 லட்சத்து ஆயிரத்து 890 வருமானம் வந்து இருப்பதாகவும், அதில் ரூ.6 கோடியே 67 லட்சத்து 27 ஆயிரத்து 330 செலவாகி இருப்பதாகவும் மீதி ரூ.8 கோடியே 64 லட்சத்து 74 ஆயிரத்து 560 வங்கி இருப்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிருப்தியாளர்கள் 20 பேருக்கு உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பி உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 27-ந்தேதி பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

இந்த பொதுக்குழுவில் தவறாது கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு நேற்று கடிதங்கள் அனுப்பப்பட்டன.

நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுக்கும் அவர்களின் வீட்டு முகவரிக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டது. மேலும் நாடக நடிகர்கள் உள்பட மொத்தம் 3,500 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இதுபோல் நடிகர் சங்கம் எதிரில் முற்றுகை போராட்டம் நடத்திய அதிருப்தியாளர்களுக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

பொதுக்குழுவில் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுதல். கட்டிட நிதி திரட்டுதல். அதிருப்தியாளர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 


Post your comment





Related News
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்
விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா ! படம் ஆரம்பம்
நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி?
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி - விஷால் நடிக்கும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions