நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை

Bookmark and Share

நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை

நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த இடத்தில் 5 மாடியில் கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக ரூ.26 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி கட்டிட நிதியில் ஒரு பகுதி வசூல் செய்யப்பட்டு விட்டது.

அடுத்து விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் புதிய படங்களில் நடித்து அதில் சம்பளமாக கிடைக்கும் தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். புதிய கட்டிடத்தில் சிறிய கல்யாண மண்டபம், 1,000 பேர் அமரும் கலையரங்கம், கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி மற்றும் நடன பயிற்சி கூடங்கள் ஆகியவை அமைய உள்ளன.

புதிய கட்டிடம் கட்டுவது குறித்து ஆலோசிக்க நடிகர் சங்க அறங்காவலர்கள் மற்றும் கட்டிட கண்காணிப்பு குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் பிரபு, ராஜேஷ், மோகன், எஸ்.வி.சேகர், பூச்சி முருகன், ஐசரி கணேஷ், ராஜா, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வரை படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஒப்புதலுக்காக வரை படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்புதல் கிடைத்ததும் கட்டிட பணிகள் உடனடியாக தொடங்கும் என்று தெரிகிறது. 


Post your comment





Related News
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்
விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா ! படம் ஆரம்பம்
நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி?
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி - விஷால் நடிக்கும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions