பணம் வேண்டாம் வெள்ள நிவாரணத்துக்கு பொருட்களாக தாருங்கள்: கார்த்தி வேண்டுகோள்

Bookmark and Share

பணம் வேண்டாம் வெள்ள நிவாரணத்துக்கு பொருட்களாக தாருங்கள்: கார்த்தி வேண்டுகோள்

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று 4–வது நாளாக பல்வேறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண பொருட்களை நடிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உதவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால், பிஸ்கேட், பிரட் போன்ற உணவு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறியதாவது:–

சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தன்னார்வர்கள் மட்டுமின்றி பல நடிகர் மற்றும் நடிகைகள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக சாந்தனு, ரமணா, சரளா போன்றவர்கள் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீரின் அளவு குறைய குறைய மக்களின் தேவை மாறிக் கொண்டேயிருக்கிறது, அதற்கேற்றார்போல நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நானும் விஷாலும் வட சென்னைக்கு சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்து அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற விதத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

காவல் துறையும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் தண்ணீர் வற்றாத நிலையில் அங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பெரிய வருத்தத்தை தருகிறது.

எம்.ஜி.ஆர் நகர், போரூர் ஆகிய இடங்களில் ரமணாவும், சைதாப்பேட்டையில் சாந்தனு, ஈ.சி.ஆரில் சந்துருவும் இன்னும் பல இடங்களில் பல நடிகர்கள் நிவாரண உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் தற்போது பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். உடனே பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் அருகில் இருக்கும் மருத்துவ முகாமிற்கு சென்று முன் எச்சரிக்கை ஊசியை போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள் பலரும் இங்கு வந்து எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.டியில் வேலை செய்பவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் என பலர் வருகிறார்கள். இன்னும் பலர் நினைத்தால் இங்கு வந்து அவர்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

விஷால் தற்போது பல நிவாரண பொருட்களுடன் கடலூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி அகரம் பவுண்டேஷன் மூலம் சிதம்பரம் யூனிவர் சிட்டியிலிருந்தும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாகவும் பல நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.

முழுவதுமாக வெள்ளம் வடிந்தபின் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், துணிகள் போன்ற பொருட்கள்தான் மிக மிக முக்கியமானது, பாதிக்கப்பட்டவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர இதுதான் அடுத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் தற்போது அதனை முழு வீச்சில் பேக் செய்து கொண்டிருக்கிறோம்.

மக்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தால் மட்டுமே விரைவில் பரவயிருக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அனைவரும் தயவு செய்து அவரவர் தெருவை சுத்தம் செய்தாக வேண்டும். அரசாங்கத்தால் அனைத்து இடங்களிலும் விரைவாக சுத்தம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

வெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தயவு செய்து பணமாக தர வேண்டாம். பொருட்களாக கொடுத்தால் அனைத்து இடங்களுக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.

இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.


Post your comment





Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions