அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்

Bookmark and Share

அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்

கருப்பு ராஜா வெள்ளை ராஜா பட செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் கார்த்தியை கிண்டல் செய்தார்.

பிரபுதேவா இயக்கத்தில் நண்பர்களான விஷால், கார்த்தி சேர்ந்து நடிக்கும் படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா. இந்த படத்தில் பாலிவுட் நடிகை சயீஷா ஷாகல் நடிக்கிறார். 

இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் கலந்து கொண்ட விஷால் பேசுகையில்,

முன்பெல்லாம் நடிகர் விஷாலை மேடைக்கு அழைக்கிறோம் என்பார்கள். தற்போது பதவிகளை சொல்லும்போது பயமாக இருக்கிறது. பதவிகளை எல்லாம் சொல்லி உன் பெயரை கூப்பிட்டால் வயசானவன் மாதிரி இருக்கும் என்று கார்த்தி சொன்னான்.

பதவிகளை சொல்லி கூப்பிடும் போது எல்லாம் பயமாக இருக்கிறது. வெடி படத்திற்கு பிறகு நானும் பிரபுதேவா மாஸ்டரும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறோம்.

பிரபுதேவா மாஸ்டருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். இரண்டு ஹீரோக்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ள படம் இது. இது போன்ற படம் வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

இந்த படத்தின் கதையை தந்த சுபாஷ் சார் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நன்றி. அவரது இறுதி நாட்களில் டயாலிசிஸ் செய்தபோது கூட இப்படி ஒரு அருமையான கதையை தந்துள்ளார்.

சயீஷா வனமகன் படப்பிடிப்பில் டான்ஸ் ஆடியபோது நானும் கார்த்தியும் பார்த்தோம். பிரபுதேவாவின் ஆவி அவருக்குள் புகுந்தது போன்று ஆடினார். கார்த்தி, நீ செத்த. கார்த்தியும், சயீஷாவும் சேர்ந்து ஆடும் பாடல் உள்ளது.

சயீஷா மாதிரி ஒரு பொண்ணு ஆடி நான் பார்த்தது இல்லை. சிம்ரன் ஆடியுள்ளார். அதன் பிறகு வேறு யாரும் அப்படி ஆடிப் பார்க்கவில்லை. வனமகன் படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நானும், கார்த்தியும் ரூ. 10 கோடி தருகிறோம். இந்த படம் மற்றும் எதிர்காலத்தில் நடிக்கும் படங்களில் இருந்து கிடைக்கும் பணத்தை கட்டிடம் கட்ட கொடுப்போம் என்றார் விஷால்.


Post your comment





Related News
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா ! படம் ஆரம்பம்
நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி?
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது
நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி - விஷால் நடிக்கும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions