சென்னையை சுத்தப்படுத்திய நடிகர்–நடிகைகள்

Bookmark and Share

சென்னையை சுத்தப்படுத்திய நடிகர்–நடிகைகள்

சென்னையில் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை நகருக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக 'ரெஸ்க்யூ சென்னை' என்ற அமைப்பை தொடங்கியுள்ள இளம் நடிகர்கள், தன்னார்வ தொண்டர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

விஷால், கார்த்தி, ஆர்யா, வரலட்சுமி உள்பட ஏராளமான நடிகர்– நடிகைகள் தன்னார்வ தொண்டர்கள் இந்த குழுவில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்து வரும் பொருட்களை தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வழங்கி வருகிறார்கள்.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஓரளவு வடிந்து விட்டது. என்றாலும் அந்த பகுதிகளில் குப்பை, சாக்கடை, கழிவுகள் குவிந்து கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே நடிகர்கள் அமைப்பு 'நெக்ஸ்ட் ஸ்டெப்பவுண்டேசன்' என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர். இதன் முதல் கட்ட பணி சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கியது. எழும்பூர் கெங்கு ரெட்டி தெருவுக்கு காலை 11 மணி அளவில் நடிகர், நடிகைகள், மருத்துவ குழு மற்றும் தன்னார்வ தொண்டர்கள் வந்தனர்.

நடிகர்கள் கார்த்தி, ஆர்யா, ராஜேஷ், ஆர்.ஜே. ரித்தீஷ், வரலட்சுமி, லலிதா குமாரி, ஸ்ரீமன், மகேந்திரன், சவுந்தர்ராஜன், பிரேம்குமார், உதயா, மாஸ்டர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் வந்தனர்.

அனைவரும் தெருவை சுத்தப்படுத்தினார்கள். குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்தினார்கள். நோய் தடுப்பு ஊசிகளும் போடப்பட்டன. நடிகர்–நடிகைகளுடன் தொண்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர். சுமார் 250 பேர் இந்த பணியை சேர்ந்து செய்தனர்.

எழும்பூர் மாநில பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சுற்றியுள்ள அனைத்து தெருக்களையும் சுத்தப்படுத்தினார்கள். அடுத்து புதுப்பேட்டை பகுதிக்கு சென்றனர். இதை தொடர்ந்து கோட்டூர்புரம் மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று துப்புரவு பணிகளை மேற்கொள்கின்றனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions