எங்களை இழிவுபடுத்தியதால் தேர்தலில் நிற்கிறோம்: விஷால் பேச்சு

Bookmark and Share

எங்களை இழிவுபடுத்தியதால் தேர்தலில் நிற்கிறோம்: விஷால் பேச்சு

நடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் கரூர் சென்றனர். அங்கு நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். அவர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:–

நாங்கள் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாங்கள் கேள்வி கேட்க கூடாது என்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடிகர்கள் இணைந்து புதிய கட்டிடம் கட்டினால் சங்கம் சார்ந்த நாடக நடிகர்கள் உள்பட 3 ஆயிரம் பேரும் பயன்பெறுவார்கள். ஆனால் தற்போதுபொறுப்பில் இருப்பவர்கள் எங்களை இழிவுபடுத்தி பேசியதால் தான் தேர்தலில் நிற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம்.
நீங்கள் எங்கள் அணிக்கு ஓட்டு போடவேண்டும். நடிகர்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அது தவறு. பிரிவு ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் கருணாஸ் கூறும் போது, சென்னையில் நடிகர் சங்க கட்டிடத்தை நடிகர்களே சேர்ந்து கட்ட வேண்டும் என கூறினோம். அதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். சங்க உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியதா?. நாடக நடிகர்களையும், சினிமா நடிகர்களையும் ஒன்று சேர முடியாத நிலையை உருவாக்குகிறார்கள் என ஆவேசமாக கூறினார்.

நடிகர்கள் விஷால், கார்த்தி வருகை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர்கள் வந்த தகவல் அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் ஆண்–பெண் அங்கு திரண்டு விட்டனர். இதனால் கூட்டம் முடிந்து வெளியே வரும் போது ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு முன்னேறினர். இதனால் தள்ளு–முள்ளு ஏற்பட்டது. போலீசார் நடிகர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக காருக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions